வெளிவந்துள்ள சிறைச்சாலை அதிகாரி பற்றிய தகவல்கள் கசிவு!


பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருந்த காலப்பகுதியில் அவர் கைத்தொலைபேசி ஒன்றை வைத்திருந்திருக்கின்றார். அந்த கைத்தொலைபேசியை அந்த நேரத்தில் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த குழந்தைவேல் நவனீதன் என்ற சிறை அதிகாரிதான் கொண்டுசென்று பிள்ளையானுக்கு கொடுத்துள்ளதாக ரிஎம்விபி அமைப்பின் முன்நாள் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

சிறையில் பிள்ளையானுக்கென்று ஒரு தனி அறை வழங்கப்பட்டிருந்தது.

அந்த அறையில் பல இரகசியச் சந்திப்புக்களை பிள்ளையான்
நடத்தியிருக்கின்றார்.

ஈஸ்டர் அசம்பாவிதத்தை மேற்கொண்ட காத்தான்குடி முஸ்லிம் ஆசாமிகளை பிள்ளையான் தயார்படுத்தியது அவரது அந்த அறையில் வைத்துத்தான்.

ஈஸ்டர் அசம்பாவிதத்தை நெறிப்படுத்திய சிங்கள உளவாளி சில்வா மற்றும் சஹ்ரானின் சகோதரர் போன்றோரை பிள்ளையான் இரகசியமாகச் சந்தித்ததும் சிறையில் இருந்த அந்த அறையில்தான்.

பிள்ளையானின் சந்திப்புக்கள் அந்த அறையில் பல மணி நேரம் நடக்குமாம்.

அந்த நேரத்தில் அந்த அறைக்கு வெளியே குழந்தைவேல் நவனீதன் என்ற அந்த அதிகாரி காவல்காத்துக்கொண்டு இருப்பானாம்.

சிறையில் பிள்ளையானின் உத்தரவுக்கு ஏற்ப நடக்காத மற்றைய கைதிகளைத் தாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்கும் செயல்களையும் இந்த நவனீதன் செய்துவந்தாராம்.

பிள்ளையானின் நிழலாக சிறைச்சாலையில் செயற்பட்ட நவனீதனுக்கு மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாய் படி சம்பளம் தன்னால் வழங்கப்பட்டதாகவும் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்து விரைவில் சிறைத்துறை நவனீதனுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதியது பழையவை