மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச வாவியினை அண்டிய பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல்



மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாவியினை அண்டிய பகுதியில் இன்று(12-09-2023) ஏற்பட்ட
தீப்பரவலை, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை போரதீவுப்பற்று பிரதேசசபையும் பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்து
வருகின்றது.

திருப்பழுகாமம்,கோவில்போரதீவு,முனைத்தீவு புன்னக்குளம் ஆகிய பகுதிகளை அண்டியுள்ள வாவியின் கரையில் உள்ள நாணல் புற்கள் மற்றும் கண்டல் தாவரங்களிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதனால், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், போரதீவுப்பற்று பிரதேச சபையின் வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் உதவிகளுடன் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயின் காரணமாக, பெருமளவான பறவைகளும் அதனை அண்டி வாழும் விலங்கினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

தீச்சம்பவம் ஏற்பட்ட பகுதிக்கு வருகைதந்த போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரங்கநாதன், தீப்பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடிமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை