இலங்கை தாதியர்கள் சங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!



இன்றையதினம் (26-09-2023) சுகாதார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தாதியர்களின் யாப்பில் ரகசியமாக திருத்தம் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த போராட்டத்தை தாதியர் சங்கத்தினர் மேற்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மெடிவத்த கருத்து தெரிவிக்கையில்,

தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், அதிகாரிகள் தாதியர் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வரைவை ரகசியமாக தயாரித்துள்ளனர்.


அந்த நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
புதியது பழையவை