புத்தல பிரதேசத்திற்கு அருகில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளது.
நேற்று இரவு 11.20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 2.4 அலகுகளாக பதிவாகியுள்ளது.
நில அதிர்வுகள்
புத்தல பிரதேசத்தில் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.