ககாணாமற் போனதாகத் தேடப்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (15-09-2023)கிளிநொச்சியில் உள்ள புது ஐயங்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதான சதுரங்க எனும் பொலிஸ் கொன்ஸ்டபிளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.