மட்டக்களப்பு சந்திவெளியில் விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற வேன் சந்திவெளியில் வைத்து
விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

சந்திவெளி பிரதான வீதியிலுள்ள மரம் ஒன்றுடன் குறித்த வேன் மோதியதில், இவ் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வேன் சாரதியான முஹம்மது {ஹசைன் மற்றும் அவரது பேத்தியான
4வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன், வேன் சாரதியான முஹம்மது {ஹசைனின் மனைவி படுகாயமுற்ற
நிலையில், மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை