அம்பிட்டிய தேரருக்கு எதிரான வழக்கு 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரருக்கு எதிராக தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31-10-2023) தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது, தேரர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இறுவெட்டில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 20 ம் திகதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 25ம் திகதி புதன்கிழமை குறித்த தேரர் மட்டக்களப்பு ஜெயந்திபுர விகாரைக்கு அருகாமையில் வீதியை மறித்து தெற்கிலுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலைலைய வெட்டி அனுப்பபோவதாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

தமிழ் சிங்கள மக்களிடையே பாரிய ஒரு இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் முகமாக கருத்துக்களை தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளன.

தேரர் இவ்வாறான இன முரன்பாட்டை தோற்றுவிக்க முயற்சித்ததுடன் தமிழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என பலரால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை