இன்றைய (31-10-2023)தினம் 43வது அகவையில் தடம்பதித்துள்ள கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்"
இந்நாளில் அவரின் அரசியல் வரலாறு பற்றிய சிறு கண்ணோட்டம்.
இன மத பேதமின்றி கிழக்கு மாகாணத்தை ஆளும் "கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள், 2009 ஆம் ஆண்டு அரசியலுக்குள் உள்நுழைந்தார்.
இவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவராக பதவி வகித்துக்கொண்டு அக்கட்சியின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும்
பாடுபட்ட அதேவேளை, மலையக மக்களின் தேவைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்துகொண்டு அவற்றை எவ்வழியூடாகச் சென்று நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வழியூடாக பயணித்து அவற்றையெல்லாம் செய்து கொடுக்கும் தன்மை கொண்டவராக இன்று வரை திகழ்ந்தது வருகிறார்.
அவர் எதை எடுத்தாலும் அவ்விடங்களை செய்து முடிக்கும் திறமையையும், விவேகத்தையும் கொண்ட ஒருவராகவும், சந்தர்ப்பங்களை சாதகமாக்கி சரித்திரங்களை வடிவமைக்கும் மிகத் துல்லியமிக்க சிறந்த தலைவராகவும் இருக்கிறார்.
இவரின் சகல செயற்பாடுகளையும் கண்ட எல்லா அரசியல் கட்சியினரும் வியந்த சரித்திரமும், சிந்திக்க வைக்கத் தூண்டிய ஒரு சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.
இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரின் மரணம் ஏற்பட்டது. அவரின் மறைவுக்குப் பின்னர், அக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட இவர், இற்றைவரை அக்கட்சியையும், உறுப்பினர்களையும் செவ்வனே வழிநடாத்திச் செல்லும் சிறந்த தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக, ஊவா மாகாண சபையின் தமிழ் கல்வியமைச்சராகவும், பதில் முதலமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளைச் செய்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட COVID-19 காலப்பகுதியில் மக்களின் தேவைகளை உணர்ந்து அத்தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்தார்.
இவரின் மனித நேய செயற்பாடுகளை அவதானித்த பல்வேறுபட்ட அமைப்புக்கள் அவரை கெளரவித்த அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர் என்று சொன்னால் அது மிகையாகாது.
இவரின் ஆளுமையான செயற்பாடுகள் மற்றும் தூரநோக்குச் சிந்தனை கொண்ட அபிவிருத்திப் பணியுடன் கூடிய திட்டமிடல்கள் போன்ற பல செயற்பாடுகளை அவதானித்த எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்கினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்ட சிறிது காலப்பகுதியில் கிழக்கு மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
கடந்த காலத்தில் மலையக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தவர் இப்போது கிழக்கு மக்களின் குரலாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறார்.
மலையக மக்களின் உள்ளங்களை மட்டுமல்ல கிழக்கு மக்களின் உள்ளங்களையும் வென்றுள்ளார்.