அடம்பனில் தமிழ் ஈழப்போர் வரலாற்றில் முதல் பெண் போராளி மாலதியின் 36 வது நினைவு நாள் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (10.10.2023) மாலை 6 மணியளவில் அடம்பனில் உள்ள அவரது இல்லத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில் மாலதியின் பெற்றோர்கள், உறவினர்கள் இணைந்து மாலதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
முதல் பெண் மாவீரர் 02ம் லெப்டின்ன் மாலதியின் 36 வது ஆண்டு வணக்க நிகழ்வு நேற்று (10.10.2023) கிளிநொச்சி தருமபுரத்தில் இலங்கை தமிழரசு கட்சியினுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நினைவு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் மேலும் உரையாற்றுகையில்,
கிளிநொச்சி
கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவத்துடன் போராடி மாலதி அவர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு போர் தொடுத்தது பல அழிவுகளை ஏற்படுத்தியது ஆனாலும் இன்றும் எங்களுக்கான தீர்வை பெற்றுத்தரும் என்பதில் நாங்கள் இந்தியாவை வேண்டி நிற்கின்றோம் நாங்கள் கியூபாவையோ அல்லது ரஷ்யாவையோ சீனாவிடமோ தீர்வு பற்றி பேசவில்லை.
இந்தியாவினுடைய இந்தியாவினால் தான் எங்களுடைய தீர்வு பற்றி பேசமுடியும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் தொடர்ந்தும் இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் அனுஷ்டிப்பு
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் இன்றையதினம் (10.10.2023) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மலர் தூவி அஞ்சலி
இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
காஸா பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் கடற்படை : தாக்குதல் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட ஹமாஸ்
இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் சகீலா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தபிசாளர் க.தவராசா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கெங்காதரன், சமூக செயற்பாட்டாளர்களான ஜூட்சன், பீற்றர் இளஞ்செழியன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.