சூரிய கிரகணம் - வானில் ஏற்படவுள்ள அதிசய நிகழ்வுநடப்பு மாதமான ஒக்டோபரில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தை எப்போது பார்ப்பது என்பது குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

வானியல், ஆன்மிகம் மற்றும் ராசி பலன்கள் ரீதியில் இந்த 2 நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 14 ஆம் திகதி சனிக்கிழமையன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரவுள்ளது. அப்போது சூரிய கதிர்களை சந்திரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.


2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் அளவில் பெரியதாக இருக்கும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும்
சனிக்கிழமை இந்த நிகழ்வு ஏற்படவுள்ளது. அமெரிக்காவில் சூரிய கிரகணத்தை எளிதாக பார்க்க முடியும். ஆனால் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை