மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் 1987ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி, இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின்
36வது நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட பலரும் அஞ்சலி நிகழ்வில்
பங்கேற்றனர்.
தனது பெரிய தந்தை சக்ரவர்த்தி இராசமாணிக்கமும், களுவாஞ்சிக்குடிப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் ஒருவர் என, நினைவுரையாற்றும் போது
இரா.சாணக்கியன் எம்.பி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.