மட்டக்களப்பு மாதவன மயிலத்தமடு பண்ணையாளர்கள் மேற்கொண்ட அதிபருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை காவல்துறையினர் ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக மாதவன மயிலத்தமடு பகுதி பண்ணையாளர்களின் பிரச்சினைகளையும், ஏனைய பிரச்சனைகளையும், பிக்குவின் அடாவடித்தனங்களையும் வெளியுலகிற்கு கொண்டு வரும் ஊடகவியலாளர்களை குறி வைத்து அவர்களது புகைப்படங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல்
குறிப்பாக நேற்றைய (08-10-2023)போராட்டத்தின் போது அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும் அதிகளவு தாக்குதல் மேற்கொள்ளும் நடவடிக்கையில் காவல்துறையினர் அதிகளவாக களம் இறக்கப்பட்டிருந்தனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் இலங்கையின் அரச தலைவர் முதல் அரை அமைச்சர்கள் வரை அச்சுறுத்தும் நடவடிக்கையை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
இலங்கை காவல்துறை ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்து அவர்களை தங்களது கடமையைச் செய்ய விடாது முடக்குகின்ற துர்ப்பாக்கிய நிலை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.