குரங்குகளின் கைகளில் பூமாலை! யாரிடம் தவறு?



பஞ்ச சீலக்கொள்கைகளை பஞ்சம் பிழைக்க வந்த ஆரியர்களிடம் தாரைவார்த்தது அசோகரின் தவறா?

உயரிய அறங்களை வகுத்து அதை தம்மை பின்பற்றுகிறார்கள் என்று குரங்குகளின் கைகளில் பூமாலைகளை கொடுத்தது போல இலங்கையை சிங்களவர்களிடம் கொடுத்தது புத்தரின் தவறா?

கடுந்துறவும் மிகை அறமும் போதிக்கும் பௌத்த துறவிகளாக ஆசைகளால் ஊறிப்போய் அடாவடி செய்யும் ஆசாமிகளை பிக்குகளாக்கியது பிரிவெனாக்களின் தவறா?

இவர்கள் மனித இனமன்று மனித வடிவில் வாழும் அரக்கர்கள்.என்றும் இவர்கள் எமக்கு எதையுமே தரமாட்டார்கள் என தெரிந்தும் இவர்களின் நீதி செத்த நாட்டில் உரிமைகளை கோரிப்போராடும் ஈழத்தமிழர்களே உங்களில் தவறா?

மேற்குலக ஊடகத்திடம் சூடான ரணில்


சர்வதேச விசாரணை இல்லை. நாங்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் அல்ல என்று வெளிநாட்டு ஊடகத்தில் அதிபருக்கு தன் நாட்டு நீதிப்பொறிமுறையின் சீத்துவாரம் தெரியாதா?

இப்படியொன்று இருக்கிறது? யார் நீதி வழங்குவது யார் நியாயம் வழங்குவது? பிணை முறி வழக்கில் தன்மீது இருக்கும் களங்கத்தையே இன்னும் கழுவிக்கொள்ளமுடியாத இந்த சிறிலங்காவின் அதிபரா நீதியை - நியாத்தை வழங்கப்போவது?


இத்தனை பட்டும் திருந்தாத ஈழத்தமிழர்களே இனிமேலும் நீங்கள் போராடத்தான் வேண்டும்.  பல்லுப்புடுங்கிய உங்கள் பிரதிநிகள் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கும் வாக்குகளுக்குமாக சிங்களத்தின் கைகளையே நம்பியிருக்க நமக்கேது நல்லது நடக்கும்.

சாணக்கியனுக்கு தும்புத்தடி முறியும் வரை அடிப்பேன் என காத்திருக்கும் அம்பிட்டியவுக்கும் தன் பிரதேசத்து மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் சக உறுப்பினரை பைத்தியக்காரன் என விழிக்கும் பிள்ளையானுக்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?






ஒரு காலத்தில் நீங்கள் தலையில் தூக்கி வைத்திருந்த அம்பிட்டிய தேரோதான் இன்று அடாத்தாக உங்கள் தலையில் ஏறி ஆக்கிரமித்திருக்கிறார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்தவரை மண்டேலா என்றெல்லாம் அளந்து விட்டு 56000 இற்கும் அதிக வாக்குகளை அள்ளி வழங்கிய உங்களுக்கு கர்மா தலைகீழாக வந்து நிற்கிறது.
புதியது பழையவை