தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசியக்கட்சிகள் அனைத்துடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டால்தான் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சரிவர பெற்றுத்தரமுடியும் என வலியுருத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு - கிழக்கின் ஒற்றுமைக்காக தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் கைகோர்த்து பயணிக்க தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.