மட்டக்களப்பில் காந்தி ஜெயந்தி அனுஷ்டிப்பு!



இலங்கையிலிருந்து உலகமெங்கும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்ததந்த நாடுகள் குடியுரிமைகள் வழங்கிவரும் நிலையில் எமது தொப்புள்கொடி உறவாகவுள்ள இந்திய அரசாங்கம் அங்கு அகதியாகவுள்ள எமது மக்களுக்கு குடியுரிமையினை இதுவரை வழங்கவில்லை என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினால் முன்வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கான திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு அகதிகளாகவுள்ள தமிழர்களுக்கு குடியுரிமையினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


காந்தி ஜெயந்தி நிகழ்வு
மகாத்மா காந்தியின் 155வது காந்தி ஜெயந்தி தினம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள காந்தி சிலையருகில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.



இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சிவம்பாக்கியநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதியது பழையவை