திருகோணமலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்துடன் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முள்ளிப்பொத்தானை பகுதியில் (17 -10-2023) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இருபிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்..

திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு செல்லும் தொடருந்தில் மோதுண்டே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்டவாளத்தில் உறங்கியதாக
முள்ளிப்பொத்தானைiயச் சேர்ந்த தாவூது சலீம் என்பவர் உயிரிழந்தவர் ஆவார்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குடிபோதையில் மூவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பும் போது உயிரிழந்தவர் தண்டவாளத்தில் உறங்கியதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் நேற்று (18-10-2023) ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர்  மேலும் தெரிவித்தனர்.
புதியது பழையவை