கொழும்பில் பேருந்து மற்றும் கொள்கலன் நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று (06.10.2023) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற அதேநேரம் பேரூந்தின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பேருந்துடன் மோதியது.
விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வடாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.