பேருந்து ஒன்றின் மீது வீதியில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் - ஐவர் உயிரிழப்பு!



கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது வீதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 17பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (06 -10-2023) காலை 6.10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


டூப்ளிகேஷன் சாலையில் லிபர்ட்டி பிளாஸாவி4ல் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தோர் மீட்கப்பட்டு கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தின் காரணமாக தற்போது குறித்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டு வீதியூடான போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

புதியது பழையவை