நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காவல்துறையினர், அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்தநிலையில், சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்று (03-10-2023) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த பேரணியில் கலந்து கொண்ட சட்டத்தரணிகளை காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படங்கள், வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.