மட்டக்களப்பு மயிலத்தைமடுவில் மனிதனை வதைத்த கூட்டம் தற்பொழுது மாடுகளை மனிதாபிமானம் அற்ற வகையில் கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளது.
ஒரு பழமொழி உள்ளது ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிப்பது என்று இங்கு முதலில் மனிதனை கடித்து அதற்கு அங்கிருந்தோர் பிடிகொடுக்காதலால் மாட்டை வதைக்க தொடங்கியுள்ளது ஒரு அத்துமீறிய பேரினவாத கும்பல்.
இச் சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களின் கருத்துப்படி அண்மைக்காலங்களிலிருந்து நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட விடயங்களில் ஒன்றுதான் இந்த மயிலத்தை மடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை இங்கு பல வருடங்களாக தங்களது மாடுகளை தங்க வைத்து மேய்ச்சல் தரையில் மேய்த்து தொழிலினை மேற்கொண்டுவரும் பண்ணையாளர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றும் நோக்குடன் அத்துமீறி விவசாயத்தினை மேற்கொள்ளும் ஒரு குழுவானது பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டு வந்தனர் குறிப்பாக பண்ணையாளர்களை தாக்குவது பண்ணை கொட்டில்களுக்கு தீ வைத்து அடித்து நொறுக்குவது அவர்களது உடமைகளை களவெடுப்பது என பல கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் அதற்கு சற்றும் பண்ணையாளர்கள் அசராத நிலை கண்ட அத்துமீறிய குடியேற்றக்காரர்கள் அவர்களது மாடுகளை வதைக்க ஆரம்பித்தனர்.
குறிப்பாக மாடுகளை சுட்டுக்கொலை செய்யுமளவுக்கு இறங்கி சென்றனர் பின் அதனைவிட ஒரு படி கீழிறங்கி மாடுகளை நாட்டு வெடிகளை பயன்படுத்தி கொடூர காயங்களை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அரங்கேற்றி வருவதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தங்களது மனவேதனைகளை வெளிப்படுத்துகின்றனர்.
வாய்பேச முடியாத மிருகங்களையும் இப்படி வதைக்கும் அளவுக்கு கேவலமானவர்கள் இந்த உலகத்தில் வாழ்கின்றார்கள் என்பதை நினைத்து மனிதகுலம் வெட்கப்பட வேண்டும்.
இங்கு பல மாதங்களாக இடம்பெற்று வரும் பண்ணையாளர்கள் மற்றும் அத்துமீறிய குடியேற்றக்காரர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும் என்பதை வினையமாக கேட்டுக்கொள்கிறேன்