கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில்  நேற்று (05 -10-2023) மாலை இடம்பெற்ற கார்  விபத்தில் படுகாயமடைந்த  25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06-10-2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.


குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இவ்விபத்தினை ஏற்படுத்திய  தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.
புதியது பழையவை