மட்டக்களப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் - நாட்டில் ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கை



கடந்து 8ம் திகதி மட்டக்களப்பு செங்கலடிக்கு வருகை தந்த ஜனாதிபதி எதிராக பண்ணையாளர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி அறிக்கையிடச்சென்ற ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி வாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகிய இருவரிடமும் அவரது வீட்டுக்கு தேடி வந்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்ற முறி பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர்.


வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக சந்தேகப்படுவதாகவும் பிறந்ததிலிருந்து எனது தாய் தந்தையின் விபரம் எனது சகோதரத்தின் விபரம் எனது குடும்பத்தின் விபரம் படித்த படிப்புகளின் விபரம் உட்பட சகல விபரங்களையும் வாக்குமூலம் பதிவு செய்து எடுத்துள்ளனர்.

இதன்போது இவ்வாறான கேள்விகளும் கேட்க்கப்பட்டது
ஆர்ப்பாட்டத்தில் வந்து என்ன செய்தீர்கள்?

எவ்வளவு நேரம் அங்கு இருந்தீர்கள்?

ஆர்ப்பாட்டத்துக்கு சென்று இருந்தீர்களா?
அங்கு என்ன செய்தீர்கள்?

ஆர்ப்பாட்டத்தின் போதுஏதும் பிரச்சனை நடந்ததா?

ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் இருந்தார்களா?

ஆர்ப்பாட்டத்தின்போது வாகனங்கள் பாதையால் சென்றதா?

ஆர்ப்பாட்ட இடத்தைவிட்டு எத்தனை மணிக்கு சென்றீர்கள்?

ஒரு ஊடகவியலாளராக நாட்டில் நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கையிட செல்ல முடியாதா இதற்கு போலீசில் அனுமதி எடுக்க வேண்டுமா ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை தற்போது முன்னெடுத்து வருகின்றது.

கௌரவத்திற்குரிய நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி ஊடகவியலாளர்கள் மீதும் வழக்கு போடும் அளவுக்கு நாட்டின் ஊடக சுதந்திரம் இருக்கின்றது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 17ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை