இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தது சீன ஆய்வுக்கப்பல்


இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தது சீன ஆய்வுக்கப்பல். கடற்பரப்பில் ஆய்வு செய்ய அனுமதி. இலங்கை கடற்படை அதிகாரிகள் கண்காணிப்பாளராக இருப்பார்கள்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான்6 நாளை மறுநாள் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இலங்கையின் மேற்குக் கடற்பரப்பில் கடல் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

NARA மற்றும் ருஹுணு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஷி யான் 6 ரக கப்பலின் ஆய்வின் போது இலங்கை கடற்படை அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள்.
புதியது பழையவை