மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்- தும்புத்தடியோடு வீதிக்கு இறங்கிய அம்பிட்டிய சுமன தேரர்!



மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மாலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள நிலையில் இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது.

இதேவேளை, அம்பிட்டிய சுமன தேரர் கையில் தும்புத்தடிகளை வைத்து கொண்டு வீதியோரத்தில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், அம்பிட்டிய சுமன தேரருடன் இணைந்து பெரும்பான்மை இன மக்கள் சிலரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புதியது பழையவை