மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தமிழர் - பிள்ளைகளுடன் கதறும் மனைவி



கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் நேற்று மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் மனைவியின் அழுகைக் குரல் பலருக்கு கண்ணீரை வரவழைத்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பாலகிருஷ்ணன் சுப்ரமணியத்தின் மனைவியான பேலியகொடையைச் சேர்ந்த தங்கஜோதி என்பர் தனது கணவரை மீட்டு தருமாறு கோரி கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அழுதுள்ளார்.

பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

கதறி அழுத மனைவி
தினமும் வேலைக்கு செல்லும் கணவர் இனி வீட்டிற்கு வரப்போவதில்லையா என தனது 2 மகள்களையும் சிறிய மகனையும் பிடித்துக் கொண்டு அழுததாகவும் அவரது புலம்பல் அங்கிருந்தவர்களை கண்ணீரை வரவழைத்ததாகவும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த 61 வயதுடைய சுப்ரமணியம் ரத்மலானை மோனா பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

“எனது கணவர் யாரையும் புண்படுத்தும் நபர் அல்ல. குழந்தைகளை மிகவும் நேசிக்கிறார். இப்போது அவர் இல்லாமல் நாம் எப்படி வாழ முடியும் . ஏன் கடவுளே என் கணவர் பயணம் செய்த பேருந்திற்கு இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தினீர்” என மனைவி அழுததாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்த விபத்தில் 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மற்றவர்களில் ஒருவர் மாலைக்குள் மருந்துவமனையை விட்டுச் வெளியேறியுள்ளார். மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதியது பழையவை