போதை வஸ்து பாவனையின் எதிரொலியே - தனது வீட்டை, தானே எரித்த இளைஞன்மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் நேற்று அதிகாலை தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக 27வயது இளைஞன் பொலிசாரினால் தேடப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

போதை வஸ்து பாவனையின் எதிரொலியே இச்சம்பவம் என தெரிவிக்கப்படுகிறது.


புதியது பழையவை