இன்று சர்வதேச ஆசிரியர் தினம்



உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு யுனெஸ்கோ சாசனத்தின்படி உலக ஆசிரியர் தினம் உருவாக்கப்பட்டது.


ஆனால் இந்த ஆசிரியர் தினத்தின் அதிகாரப்பூர்வமான கொண்டாட்டம் அக்டோபர் 5, 1994 இல் தொடங்கப்பட்டது. உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து இலங்கையில் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஏந்தவொரு மனிதனும் தனது வாழ்நாளில் அனைத்து வெற்றிகளையும் தன்வசப்படுத்தி உயர் நிலைக்கு செல்ல ஒரே ஒரு காரணமாக இருப்பவர் ஆசிரியர் மட்டுமே . குருவை மிஞ்சிய சீடன் இருந்தாலும் அவனுக்கு அகரம் சொல்லி கொடுக்க மானசீக குரு ஒருவராவது இருந்திருக்க வேண்டும்.

மாதா , பிதா , குரு , தெய்வம் என தெய்வத்துக்கும் முன்னால் குரு போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை