21 ஆண்டுகளுக்கு பின்னர் தங்க பதக்கம் வென்ற இலங்கை



ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை தனது முதலாவது தங்கப் பதக்கத்தை இன்று வென்றுள்ளது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னே தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.


கடந்த 2002ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமயந்தி தர்ஷா மற்றும் சுசந்திகா ஜெயசிங்க ஆகியோர் இலங்கைக்காக 2 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தனர்.


இதேவேளை, நேற்று (04-10-2023)நடைபெற்ற பெண்களுக்கான 4x400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை வெண்கல பதக்கம் பெற்றுள்ளது.



இலங்கை இதுவரை நான்கு பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை