மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரையில் அத்துமீறிய வெளிமாவட்ட பெரும்பான்மையினரை வெளியேற்றும் கவன ஈர்பபு போராட்டத்தில் பண்ணையாளர்கள், பொதுமக்களுடன் ஜனாதிபதி ரணில் செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்திற்கு சென்ற தினமான கடந்த (08/10/2023),ல் கொம்மாதுறையில் கலந்துகொண்ட மைக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் வழக்கு தாக்கல்..!
வவுணதீவு பொலிசார் அதுதொடர்பாக அம்பிளாந்துறையில் எனது வீட்டில் வந்து விசாரணை செய்து நீதிமன்ற முறிப்பத்தி்ரத்தில் (Bond) இன்று(28/10/2023) கையொப்பம்பெற்று சென்றனர்.
அதற்கான வழக்கு எதிர்வரும் 2023, நவம்பர்,17, ம் திகதி ஏறாவூர் நீதிமன்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!
-பா.அரியநேத்திரன்-