மட்டக்களப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை



மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பகுதியை சேர்ந்த இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று (15 10-2023)ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி கடந்த நான்கு வருடமாக ஆரையம்பதி பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த போது அதே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இளைஞன் ஒருவனை காதலித்து வந்ததாகவும் பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்து தனது வேலையினை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில், குறித்த யுவதி தனியாக இருந்துள்ளதாகவும் பின்னர் வீட்டின் அறையினுள் சென்று தனக்குத்தானே தூக்கு மாட்டிக்கொண்டதையடுத்து இதனை கண்ட தாயார் தூக்கிலிருந்து யுவதியை மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை