காற்சட்டை பக்கட்டுக்குள் கைவிட்டு வேடிக்கை பார்த்து நிற்கத்தான் நாடாளுமன்றம் அனுப்பினீர்களா மட்டக்களப்பு மக்களே.
உங்கள் வாக்குகளை ஒரு கழுதைக்கு போட்டு இருந்தால் பொதியாவது சுமந்திருக்கும் என அங்கலாய்க்கின்றார் பொதுமகன் ஒருவர்.
பேரின ஆக்கிரமிப்பிற்குள் சிக்கி தங்கள் மேய்ச்சல் நிலங்களை இழந்து போராடும் மட்டக்களப்பு மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பிரதிநிதி காற்சட்டை பக்கட்டுக்குள் கைவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.
உயர்சபையில் மிரட்டல்
அந்த மக்களுக்காக நடிப்போ நாடகமோ நிஜமோ எதுவென்றாலும் நாட்டின் உயர்சபையில் குரல் கொடுப்பவர்களை பார்த்து போடா பைத்தியக்காறன் என்கிறார்.
மட்டக்களப்பு மக்களே உங்கள் வாக்குகளை பெற்ற நன்றியில்லாத ஜீவன் சிங்களவர்கள் கொடுத்த இராஜாங்க அமைச்சுப் பதவிக்கு வாலாட்டுகிறது.
நாடாளுமன்றத்தை வழிநடத்துபவரை பார்த்து மச்சான் என அழைப்பதும் குதூகலிப்பதும் கொண்டாடுவதுமாய் திரியவா வாக்களித்தீர்கள்.
55000 அதிகமான மட்டக்களப்பு மக்களே உங்கள் மனசாட்சிகளை அடகுவைத்தா அலைகின்றீர்கள்.
நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன வர்ஷா , விதுஷா கடத்தல்களும் படுகொலைகளும் குடும்பச்சுமையை சுமந்து வியாபார நிலையத்தில் பணியாற்ற வந்த அப்பாவி இளைஞர்களின் சுற்றிவளைப்பும் படுகொலைகளும் ஏன் அந்த மனிதர் ஜோசப்பரராஜசிங்கம் உங்களுக்காகத்தானே பேசினார்.
இன்னுமொரு தேர்தல்
எத்தனை எத்தனை இளைஞர் யுவதிகளின் ஆன்மாக்கள் உங்களை மன்னிக்குமா.
மட்டக்களப்பு மக்களே இன்னுமொரு தேர்தல் வரும் அப்போதும் உங்கள் மட்டக்களப்பு மண்டேலாவுக்கே வாக்களியுங்கள். நன்றாக காற்சட்டை பக்கட்டுக்குள் கைவிட்டு பார்த்துக்கொண்டிருப்பார்.
சிங்களவர் உங்கள் அடிமடிகளில் கை வைத்தாலும் மட்டக்களப்பு மக்களே உங்களை எங்கள் ஆயிரமாயிரம் மாவீர்ர்களின் ஆன்மா மன்னிக்குமா?