அம்பாறை மாவட்டம் ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தை அண்மித்த முகத்துவாரம் பகுதியில் இன்று(07-10-2023) ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் பிற்பகல் 2 மணியின் பின்னர் நிலவிய திடீர் காலநிலை மாற்றத்தின் போது வீச்சு வலை மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த நான்கு பேரே மின்னல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த
நான்கு பிள்ளைகளின் தந்தையான
சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவரான 7ம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (32),
02ம் பிரிவைச் சேர்ந்த எஸ்.எம் அஹமட் (50) 04ம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மிர் (36) ஆகியோர் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.