வவுனியாவில் அரச பேருந்து மீது தாக்குதல்வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அரச பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் (21.10.2023) இடம்பெற்றுள்ளது.

பராக்கிரமபுர பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஸ்தம்பிதம்
காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே அரச பேருந்தின் கண்ணாடி மீது மதுபான போத்தலை வீசிவிட்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் பேருந்தின் கண்ணாடி சேதமடைந்ததுடன் அப்பகுதியூடான போக்குவரத்தும் 30 நிமிடங்களாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை