மட்டக்களப்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் - இரா.சாணக்கியன் MPமட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக பாரியளவு போராட்டம் ஒன்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போராட்டம் நாளையதினம் (08.10.2023) காலை 8.30 மணியளவில் கல்குடா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மயிலத்தமடு மேய்ச்சல்தரை மீதான அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை