இலங்கையில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்து!



குருநாகல் பிரதேசத்தில் இருந்து கரந்தெனியாவிற்கு கறுவாப்பட்டைகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுக்க - ஹொரண வீதியில் மின் கம்பத்துடன் மோதி அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்து இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (07 -10-2023) அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வண்டியின் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
புதியது பழையவை