ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பித்தல் தொடர்பான அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த அறிவித்தலை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு (16.11.2023) வெளியிடப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பெறுபேறுகளுடன் District Rank அல்லது Island Rank வெளியிடப்பட மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மாணவர்களின் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தால், நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை மீள் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிகழ்நிலை முறையில் குறித்த விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.