கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்கள கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது
ஸ்ரீ மலை நீலியம்மன் சைவ கோவில் முழுமையாக சிதைக்கப்பட்டு அங்கு 'பாசன பப்பாத ராஜமஹா' என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள்
குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு அதே இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள்
அரிசிமலையில் தமிழ் நிலங்களில் 'ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை' (Asiri Kanda Purana Rajamaha Viharaya) கட்டப்பட்டு இருக்கின்றது
தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடை செய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது
64ம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது
பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன
ராஜவந்தான் மலை கோவில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது
மூதூர் சூடைக்குடா மத்தளம்மலை சூழலில் பௌத்த தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக கூறுகின்றார்கள்
இந்த வகையில் திருகோணமலையில் 74 ற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள்.
இது போதாதென்திருக்கோணேஸ்வரம் கோவில் சூழல் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, இந்த கோவில் கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என உரிமை கோருகின்றார்கள். இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்
திரியாய், மற்றும் தென்னமரவடிபல ஆயிரக்கணக்கான வயல் காணிகளில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக விவசாயம் தடை செய்யப்பட்டு இருக்கின்றது
திரியாய் கிராமத்தில் மட்டும் 1,000 ஏக்கர் வயலில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் 2,712 ஏக்கர் காணியை அரச திணைக்களங்கள் உரிமை கோரி இருக்கின்றது
இதில் மூன்று புதிய பௌத்த விகாரைகளும் ஒரு பழைய பௌத்த விகாரையும் அமைக்கப்பட்டு அவற்றுக்கு 809 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது
அதே போல கங்குவேலி கிராமத்தில் 500 ஏக்கர் வயல் நிலங்கள் சிங்களவரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது
இங்கு கங்குவேலி குளத்தை சூழ சிங்களவர்கள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது
குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில் மட்டும் 2,500 ஏக்கர் நிலப்பகுதி பானமுர திலகவன்ச என்கிற பிக்குவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது
அதே போல குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் 11 இடங்களில் 340.33 ஏக்கர் நிலம் குத்தகை அடிப்படையில் 7 பௌத்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது
இங்கு 30 க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இந்த பகுதியில் 23 இடங்களில் பௌத்த கட்டுமானங்கள் முழுமை பெற்று இருக்கின்றன
மேற்படி பானமுர திலகவன்ச என்கிற பிக்கு அரிசிமலை என்கிற பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கின்றார்
இங்கு 500 ஏக்கர் காணி அரசாங்கத்தால் பௌத்த பிக்குகளுக்கு இங்கு வழங்கப்பட்டு இருந்தது. அதே போன்று அரிசிமலையுள்ள 500 ஏக்கர் காட்டு பகுதியும் பௌத்த தொல்லியலுக்குரிய இடமாக பிரகடனம் செய்யப்பட்டு இருக்கின்றது
தென்னைமரவாடி , திரியாய் , குரும்பைசிட்டு , புல்மோட்டை போன்ற இடங்களில் உள்ள 11 இடங்களில் தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான நிலங்கள் அரச நிலங்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன
தென்னைமரவாடி தமிழ் கிராமங்களில் மாலனூர் (12 ஆம் கட்டை ) மற்றும் ஏறமாடு (10 ஆம் கட்டை ) இரண்டு சிங்கள குடியேற்ற திட்டங்கள் உருவாக்கபபட்டு இருக்கின்றன
இவ்வாறு கன்னியா , குச்சவெளி , கும்புறுப்பிட்டி , சாம்பல்தீவு , சம்பூர் மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது
மேற்படி அவலங்களை அரசியல் ரீதியாக வலுமையாக எதிர்க்கொள்ள கூடிய தமிழ் ஆளுமைகளை அரசியல் மற்றும் சிவில் பொதுவெளியில் அடையாளம் காணாமல் திருகோணமலையை யாராலும் காப்பாற்ற முடியாது.