மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைவெலிசறை இருதய வைத்தியசாலையில் (31-10-2023)ஆம் திகதி  மின்னல் தாக்கியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டி.எல்.வனிகரத்ன தெரிவித்துள்ளார்.


இதனால் வைத்தியசாலையின் கதிரியக்க பிரிவில் இருந்த அத்தியாவசிய இயந்திரங்கள் பல சேதமடைந்துள்ளதோடு மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலையின் கணனி அமைப்பும் முற்றாக செயலிழந்துள்ளதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மின்னல் தாக்கத்தின் பின்னர் வைத்தியசாலையின் எக்ஸ்ரே இயந்திரங்கள் இயங்காததால் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் சி.டி. ஸ்கேன் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு தற்போது வைத்தியசாலையின் கணனி அமைப்பை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வெலிசர இருதய வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மாத்திரமே மின்னல் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பணிப்பாளர், வைத்தியசாலையில் மின்னல் தாக்கியதால் ஊழியர்களுக்கோ, நோயாளர்களுக்கோ பாரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலைக்கு ஏற்பட்ட இழப்பு இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும், பழுதடைந்த இயந்திரங்களை விரைவில் மீளமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை