இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் இன்று (12-11-2023) காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக அணித் தலைவராக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கசப்பானதோல்விகள்
மேலும், உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை அணிக்கு அச்சுறுத்தல் அல்லது வெளி அழுத்தங்கள் எதுவும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பல போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை தொடர்ந்து பெற்றது.
அதனை தொடர்ந்து சிறிலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.