20 இலட்சம் அரச ஊழியர்களுக்கு - 2024 ஆம் ஆண்டு சம்பள உயர்வு!அரச ஊழியர்கள் உட்பட சுமார் 20 இலட்சம் வரையான ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான (2024) வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 14 இலட்சம் அரசாங்க ஊழியர்களும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சினை மேற்கோள் காட்டியே ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு மாத்திரமன்றி அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நலன் பெறும் 10 இலட்சம் பேருக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பள உயர்வுகள் சில படிமுறைகளாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வரிகளை அறிமுகப்படுத்தல், வரி வீதத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் (13 -11-2023)ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அடுத்த ஆண்டுக்கான (2024) வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புதியது பழையவை