மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட தென் ஆபிரிக்க நாட்டு உயர்ஸ்தானிகர்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா அவர்களது அழைப்பின் பேரில் ஏறாவூர் நகரசபைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது ஏறாவூர் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் மற்றும் ஏறாவூர் நகர சபை தொடர்பான அபிவிருத்தி திட்டங்கள், ஏறாவூர் நகர் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.மேலும், இலங்கை மக்களுடன் தென் ஆபிரிக்க நாடு நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புதியது பழையவை