இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ஏமாற்றம்இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளது.

சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்குபற்றிய கடைசிப் போட்டி நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடும் கோபத்தில் ரசிகர்கள்
இலங்கை அணியின் படுமோசமான விளையாட்டு காரணமாக ரசிகர்கள் மத்தியில் கடும் கோப நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் கட்டுநாயக்க வந்த இலங்கை அணியை வரவேற்க யாரும் செல்லவில்லை எனவும் ஊடகவியலாளர்கள் சிலர் மாத்திரமே வருகைத்தந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
புதியது பழையவை