மட்டக்களப்பில் ஊடகவியலாளர் உதயகாந்தின் தாயார் காலமானார்



மட்டக்களப்பு ஊடகவியலாளரும் மாவட்ட தகவல் திணைக்கள உத்தியோகத்தருமான உதயகுமார் உதயகாந்தின் தாயார் நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி வேலூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் உதயரஜனி(63வயது)காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது பூதவுடல் கல்லடி வேலூரில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று (10-11-2023)மாலை 4.00மணியளவில் கல்லடி வேலூரில் உள்ள பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை