இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (15 -11-2023) மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதோடு, அவருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் வருகை தந்திருந்தார்.
இதன்போது அமெரிக்கத் தூதுவர் மட்டக்களப்பு சரவணா வீதியில் அமெரிக்க அரசினால் நிறுவப்பட்டுள்ள அமெரிக்கன் ஹப் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தையும் திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.