முச்சக்கரவண்டியுடன் மோதிய - இ.போ.சபை பஸ்களுத்துறை பிரதேசத்தில் இன்று (08 -11-2023) காலை விகாரைக்கு காணிக்கை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் இரத்மலானை டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று மோதியதில் 5 பெண்கள் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த 10 பேர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.காயமடைந்தவர்களில் பஸ் சாரதியும், முச்சக்கரவண்டி சாரதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து காரணமாக களுத்துறை மத்துகம வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து களுத்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ​​காணிக்கை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, அருகில் உள்ள விகாரைக்கு வலப்புறம் திரும்ப முயற்சித்தபோது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பஸ் மறுபுறம் அருகில் இருந்த வடிகானில் விழுந்து சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.புதியது பழையவை