நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த சந்தேகத்தில் அம்பாறை
பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், பெரிய நீலாவணைப் பகுதியில் நடமாடுவதாக, பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஜே.எஸ்.கே. வீரசிங்க தலைமையிலான குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக்
கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.