சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா . துரைரெத்தினத்தின் “ கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் அறிமுக நிகழ்வு திருகோணமலை பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (11.11.2023) இடம்பெற்றுள்ளது.
கிழக்கு நிலப்பரப்பில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான ஆவண நூலாக வெளியிடப்பட்ட இந்நூலில் கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ், சிங்கள , முஸ்லீம் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பிலான தகவல்கள் திரட்டாக இடம்பெற்றிருக்கிறது.
சிரேஸ்ர ஊடகவியலாளர் திருமலை நவம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் கிழக்குமாகான கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி அவர்களும் சிறப்பு விருந்தினராக சிரேஸ்ட எழுத்தாளர் தேவகடாட்சம் அவர்களும் கலந்துகொண்டனர்.
சமகால பிரச்சினைகள்
இதன்போது திருகோணமலை மாவட்டம் சமகாலத்தில் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் அதன்காரணமாக தமிழ்மக்களின் குடிப்பரம்பலில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி தொடர்பிலும் சனத்தொகை கணக்கெடுப்பின் ஒப்பிடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுடன் இப்போதைய சூழலையும் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குமான குறைந்த பட்ச தீர்வினை பெற்றுக்கொள்ளுவதற்குமாக இளைஞர்களுக்கான அரசில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.