மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையால் - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கல்மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் மிகவும் பொருளாதார நெருக்கடியில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கு
போசாக்கான உலருணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

2023 ஆம் ஆண்டுக்கான நிதி நிதியொதுக்கீட்டின் கீழ் இவ் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.


போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் தலைமையில், உலருணவுப் பொதிகள் கையளிக்கும்
நிகழ்வு இடம்பெற்றது.

வெல்லாவெளி சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட, 43 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் இருந்தும் 372 பேருக்கு
உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.புதியது பழையவை