மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் - பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட சிறுவர் பூங்கா புத்துயிர் பெற்றது



மட்டக்களப்பு போராதீவுப்பற்று திருப்பழுகாமத்தில், பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட சிறுவர் பூங்காவொன்று, களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தால், சமுதாய சீர்திருத்தத்திற்கு உட்பட்டவர்களைக் கொண்டு, புனரமைப்புச் செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.


களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.வி.ஏ.ரஞ்சித்குமாரின் வழிகாட்டலின் கீழ், பிரதேச சபையின் அனுசரணையுடன், ‘பழுகாமம் லேக் சில்ரன் பாக்’ எனும் பெயரில் இச் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் சிறுவர் பூங்காப் பகுதியில் மரங்களையும் நாட்டி வைத்தார்.






போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் வி.கௌரிபாலன், போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஏ.துலாஞ்சனன் ,போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடப் பணிப்பாளர் சசிகுமார் ,களுவாஞ்சிகுடி நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகஸ்தர் க.புவனேந்திரன்,சீர்திருத்த வேலைப்பரிசோதகர் ம.ருமணன் உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை