மட்டக்களப்பு கதிரவெளியில் நான்கு பறள் வடி சாராயத்துடன் நால்வர் கைது!நான்கு பறள் சட்டவிரோத வடி சாராயத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் கடந்த(30-10-2023)ஆம் திகதி மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த தலைமையக இராணுவப் புலனாய்வுப்பிரிவிற்கு பொதுமக்கள் வழங்கிய இரகசியத்தகவலுக்கமைய வெலிகந்த இராணுவ முகாம் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்நால்வரும் வாகரைப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரவெளி ஆற்றங்கரைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் 4 பறள் வடி சட்ட விரோத வடி சாராயம் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் சான்றுப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாகரைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நால்வரும் கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை